2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாடகராகுவுதற்காக குழந்தையை விற்ற தந்தை

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சியில் பங்குபற்றி மிகப்பெரிய பாடகராக வேண்டும் என்ற ஆசையில் தனது 4 மாத குழந்தையை விற்ற தந்தைக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்வம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்த சொவ் என்ற நபருக்கே இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாடுவதில் ஆர்வம் மிக்க இவருக்கு 4 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து விசாணைகளை மேற்கொண்ட சீன பொலிஸார் பெண்ணின் கணவரான சொவ்,  குழந்தையை  விற்றுள்ளதை அறிந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சொவ் கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி நபர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடகராகும் ஆசையில் தனது குழந்தையை விற்றதாக விசாரணைகளின்போது ஒப்புகொண்டுள்ளார்.

குழந்தையை விற்று அதற்கூடாக பெற்ற 1650 அமெரிக்க டொலரை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பக் கட்டணமாக கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X