2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தூக்கி சுமக்கும் நண்பர்கள்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்த அசோக் சவான்(16) என்ற மாணவனே இவ்வாறு அரிய வகை எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பில் படித்து வருகிறார். 

15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீர் என்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த வலி அதிகமாகி அவரால் நடக்கவே முடியாமல் போனது.

சோலாபூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அசோக் சவானை பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

இவருக்கு மியூகோபாலிசாக்கரைடோசஸ (ஆரஉழிழடலளயஉஉhயசனைழளநள) என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த நோய் வந்தால் எலும்புகள் பலவீனமாகிவிடுமாம். அதிலும் குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு பகுதி எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு நடக்க முடியாமல் போனதை அடுத்து அவரை தர்மா தான் தினமும் பள்ளிக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவரது மனம் மகனை சுமக்க தயாராக இருந்தாலும் அவரது வயது இடம்கொடுக்கவில்லை.

இந்நிலையில், தர்மா படும் கஷ்டத்தை பார்த்த சவானின் நண்பர்கள் தங்கள் நண்பனை ஒரு குழந்தையை போன்று தினமும் பள்ளிக்கு தூக்கிச் சென்று வருகின்றனர்.

சவானுக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது தான் கனவு ஆகும். அவரது கனவை நனவாக்க நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர். 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .