2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரட்டையர்களால் நிறைந்த வகுப்பு

Kogilavani   / 2014 மார்ச் 04 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா, வுகான் நகரில் உள்ள பாலர் பாடசாலையொன்று 20 இரட்டையர்களை மாணவர்களாக கொண்டுள்ளது.

இப்பாடசாலையின் மொத்தமாக 22 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்களில்  20 மாணவர்கள் இரட்டையர்கள் என்பதால் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆசிரியை ஒருவர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்.

ஆசிரியை வகுப்பினுள் வந்தவுடன் ஒரே சீருடையில் இருக்கும் மாணவர்களை கண்டு அவர் குழப்பமடைவதாக தெரிவித்துள்ளார்.

'இம்மாணவர்களில் 10 சோடி மாணவர்கள் இரட்டையர்களாக உள்ளனர். இவர்கள் ஒரே விதமான சீறுடைகளை அணியும்போது அவர்களை யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் உள்ளது.

இவர்களில் யார் குற்றம் செய்தாலோ அல்லது யாரிடம் கேள்விகளை கேட்பது என்பதிலோ  மிகவும் கடினமாக உள்ளது.

ஆனாலும் சிறுசிறு அடையாளங்களை வைத்தே அவர்களை நான் வித்தியாசம் தெறிந்துகொள்வேன்.

உதாரணமாக, பெண் இரட்டை குழந்தைகளான கஹோ யின்பன் மற்றும் கஹோ யின்லின் ஆகிய இருவரில் ஒருவருக்கு நெற்றியில் மச்சம் உண்டு. மற்ற குழந்தைக்கு மச்சமில்லை. இவ்வாறான சிறுசிறு அடையாளங்களை வைத்தே என்னால் இக்குழந்தைகளை இனங்கண்டுகொள்ள முடிகிறது.

இதில் என்ன சுவாரஷ்யமென்றால் நான் ஒரு குழந்தையை வெளியேற கூறினால் அதனது சோடி குழந்தை பயந்து அழும்' என்று அவ் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் அதிகமான இரட்டையர்கள் இல்லை. ஆனாலும் தற்செயலாக இவ்வாறான இரட்டை குழந்தைகள் ஒரே பாடசாலையில் சேர்ந்து விடுகின்றனர் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X