2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வாழைப்பூவிலிருந்து கன்றுகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


வாழைப்பூவிலிருந்து ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய முறையை மடவளையைச் சேர்ந்த இளம் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.சுஹ்ரி  என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பொதுவாக வாழைமரத்தின் அடியிலிருந்து  வாழைக் கன்றுகள் உருவாகின்றன.

இந்நிலையில்,  இழையங்கள் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழைக் கன்றுகளை உருவாக்கியுள்ளார். ஒரு வாழைப்பூவிலிருந்து ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில்  இம்முறை வெற்றியளித்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக இலங்கையிலும் இவரது முயற்சி வெற்றியளித்துள்ளது.

மடவளை மதீனா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் வன இலாகா ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக உள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .