2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தாடியிலும் சாகசம்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழ்ந்து வரும் நபரொருவர் தனது தாடியால் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி வருகின்றார்.

பியர்ஸ் தியோட் (27) என்ற நபரே தனது சிறிய தாடியால் இத்தகைய சாகசங்களை புரிந்து வருகின்றார்.

இவர், விடுமுறை தினங்களில் வீட்டில் இருக்கும் போது, தீயை பற்ற வைத்த நிலையில் தீக்குச்சிகளை தாடியில் சொருகி வைப்பது, ஸ்ட்ரோ, பல் இடுக்கு குத்தி, பென்சில், பாஸ்தா உட்பட பல பொருட்களை தனது தாடியில் சொருகுதல் போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இவரது, இத்தகைய சாகசங்களை கண்டு இவரது மனைவி ஸ்டேசி (28) 'உங்களால் எப்படி தாடியால் இவ்வாறு செய்யமுடிகிறது?' என பியர்ஸ் தியோட்டிடம் வினவியுள்ளார்.

இவர் தான் புரிந்த சாகசங்களை புகைப்படமாக பிடித்து இணையத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X