2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பறவைகளுக்கான பாடல் போட்டி

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாய்லாந்தில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பறவைகளுக்கான பாடல் போட்டி இம்முறையும் இடம்பெறவுள்ள நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்தும் இலட்சக்கணக்கான பறவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள பறவைகள் வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களின் மீது கூடுகளில் அடைக்கப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்டுள்ளன.

தாய்லாந்து, மலேஷியா, சிங்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமது பறவைகளுடன் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு வருடமும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பறவைகள் இசைக்கும்போது வெளிவரும்; சுருதி, மெல்லிசை, சத்தம் என்பவற்றுக்கு ஏற்ப பரிசில்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில், முதலிடத்தை பெறும் பறவைக்கு இலங்கை ரூபாய் படி 4,020,960 பரிசாக வழங்கப்படுகின்றன.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .