2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

மனித குரங்கினால் தாக்குதலுக்குள்ளான பெண்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதகுரங்கொன்றின் தாக்குதலுக்கு இழக்கான பெண்ணொருவர் நஷ்ட ஈடுகோரி அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சால்ஸ் சாஸ் எனும் 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு வழக்கு  தாக்கல் செய்துள்ளார்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது சிநேகிதியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது அவரது சிநேகிதி சட்டவிரோதமாக வளர்த்து வந்த மனித குரங்கானது சால்ஸை மிக கொடூரமாக தாக்கியது.

இத்தாக்குதல் சம்பவத்தில் சால்ஸின் மூக்கு, உதடு, கண்கள் மற்றும் இரு கைகள் என்பன சேதமாகின. 

இச்சம்பத்தினால் கைகளை இழந்த அப்பெண்  அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட கொடூரம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறான சட்டவிரோத செயல்களை அரசாங்கம் கண்டிக்கவேண்டும் என்பதனை வலியுருத்தும் வகையிலேயே தான் வழக்கு தாக்கல் செய்ததாக பாதிக்கப்பட்ட அப்பெண் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமல்லாது 'தனது மருத்துவ செலவுகளுக்கும் ஒரு நிம்மதியான வாழ்கைக்கும் பணம் தேவைப்படுவதாக அப்பெண்  
200 இறாத்தல் நிறையுடைய மேற்படி மனித குரங்கு தாக்குதல் நடந்த அன்றே பொலிஸாரினால்; சுட்டுகொல்லப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .