2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

உடலுக்கு வெளியே இதயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்குழந்தையை காப்பாற்ற உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால், அதற்கு பணம் அதிகளவு செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா உத்தர பிரதேசம், சல்டன் என்ற அரச மருத்துவமனையில் இதயம் உடலுக்கு வெளியே அமைந்த நிலையில் ஆண் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா பால்(24), பால் (30) என்ற தம்பதியினருக்கே இவ்வாறான குழந்தை பிறந்துள்ளது.

இத்தம்பதியினருக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் தனது முதல் குழந்தையை பிரியங்கா பால் மேற்படி அரச மருத்து மனையில் ஆண் குழந்தையொன்றை கடந்தவாரம் பிரசவித்துள்ளார்.

இக்குழந்தைக்கு இதயமானது மார்பக பகுதிக்கு வெளியே காணப்படுகின்றது.

இக்குழந்தையை காப்பாற்ற உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால், அதற்கு பணம் அதிகளவு செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வறுமைக்கோட்டுக்குட்பட்ட மேற்படி தம்பதியினர் அத்தகைய பணத்தை திரட்டுவதற்காக மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் இந்திய அரசாங்கம் இதற்கு உதவி செய்யும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

'எனது குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்யவிட்டால் மிகவும் குறுகிய காலமே உயிருடன் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நான் ஏழ்மையானவன். ஒரு நாளைக்கு இரு வேலை உணவை மாத்திரமே உண்டு வருகின்றோம். நாம் உதவியற்று இருக்கின்றோம்' என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்குழந்தை தற்போது சல்டன் அரச மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக தெஹ்ராதுன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படியும் சிகிச்சைக்காக பல இடங்களுக்கு இக்குழந்தை இடம்மாற்றப்படும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .