2025 ஜூலை 02, புதன்கிழமை

அறத் தொண்டுக்காக மொட்டையடித்த சிறுமி

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக சிறுமியொருவர் தனது தலையை மொட்டையடித்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டன், இசெல் பகுதியைச் சேர்ந்த ஜெஸ் வின் என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு தனது தலையை மொட்டையடித்துள்ளார்.
 
இவரது பாட்டனார், அண்மையில் புற்றுநோய்க் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இழப்பை நன்கு உணர்ந்த அச்சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 ஸ்ரேலிங் பவுனுக்கு மேல் நன்கொடையை திரட்டிகொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு தனது தலையை மொட்டையடித்துள்ளார்.

ஆனாலும், இச்சிறுமி தலைமயிர் இல்லாது பாடசாலைக்கு வருவதற்கு பாடசாலை நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக அச்சிறுமியின் தாய் வென்டி தெரிவித்துள்ளார்.

'அறத்தொண்டுக்காக எனது மகள் தலையை மொட்டையடித்திருந்தாலும் அதுவே அவருக்கு பிரச்சினையை கொடுத்துள்ளது' என சிறுமியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சிறுமி கல்விக்கற்கும் பாடசாலையில் நீண்ட தலைமயிருடன் மாணவிகள் பாடசாலைக்கு வருவது பாடசாலையின் சீருடை கொள்கையில் ஒன்றாக காணப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .