2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பெண் குழந்தையுடன் தீக்குளித்த தந்தை

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் தன்னை தானே எரித்துக்கொண்டது மட்டுமல்லாது தனது 5 வயதுடைய பெண் குழந்தையையும் எரித்த சம்பவமொன்று இத்தாலியின் மத்திய பகுதியான பெஸ்காராவில்  இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய இவர் குழந்தையின் தாய் முன்பாகவே காரொன்றினுள் இருந்துகொண்டு பெற்றோலை தன் மீதும் தனது பெண் குழந்தை மீதும் ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி தம்பதியினர் கடந்த வருடத்திலிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். இதன் பின்னர் மேற்படி நபர் தனது 5 வயது பெண் குழந்தையுடனும் தான் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட பெண் மற்றும் அவரின் மூன்று பெண் குழந்தைகளுடன்; வாழ்ந்து வந்திருக்கின்றார்.

இந்நிலையில் தனது மகள் வன்முறைக்கு உட்படுகின்றார். அவரை மீட்டு தருமாறுகோரி குழந்தையின் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  

குழந்தை வன்முறைக்கு உட்படுகின்றார் என்று உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வழக்கின் பிரகாரம் குறித்த பெண் குழந்தையை ஒரு கிழமைக்கு ஒரு தடவை மட்டுமே பார்க்க முடியும் என்று மேற்படி நபருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அது மாத்திரமன்றி குழந்தையை சந்திக்கும்போது பொது இடம் ஒன்றில் வைத்தே சந்திக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பிரகாரம் குறித்த நபர் குழந்தையை சந்திக்கச் சென்றுள்ளார். அவமானம் தாங்க முடியாத தந்தை பயணத்தை மேற்கொள்ள முன்னர் தாயின் முன்னாலேயே இவ்வாறு குழந்தையுடன் தீமூட்டிக்கொண்டுள்ளார்.

குழந்தையின் தாய் இரண்டு, மூன்று தடவைகள் குழந்தையை காப்பாற்ற முயற்சித்த போதும் காப்பாற்ற முடியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .