2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

மடிக்கணினியை திருமணம் செய்வதற்காக சட்ட அனுமதி கோரிய நபர்

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஆபாசப்படங்கள் நிறைந்து கிடக்கும் தனது மடிக்கணினியை திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை தருமாறுகோரி சட்டத்தரணி ஒருவர் அமெரிக்க நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் செவிர் என்ற வழக்கறிஞரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இசையைப் போலவே ஆபாசப் படங்களையும் அதிகமாக நேசிக்கும் இவர் அவரது மடிக்கணினியில் அதிகமான ஆபாசப்படங்களை சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில், உட்டாவில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து மேற்படி சட்டத்தரணிக்கும் மடிக்கணினியை திருமணம் செய்துகொள்வதற்கான ஆசை வந்துள்ளது.

இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திக்க விரும்பிய கிறிஸ், திருமண உறுதிப்பத்திரம் கோரி சம்பந்தப்பட்ட துறையை அணுகியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை அத்துறை நிராகரிதுள்ளது.

இதனால், தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி கிறிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இது கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி அதனை நிராகரித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .