2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பெண்ணின் தொடையை பதம்பார்த்த பாம்பு

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணின் தொடையைத் தீண்டிய 6 அடி நீளமான விஷமற்ற ஒரு வகை மலைப்பாம்பு தொடர்பில் சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சிங்கப்பூரைச் சேர்ந்த நொரஷ்லிண்டா அசட் (வயது 34) என்ற பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

தனது வீட்டின் கீழ்பகுதியில் உள்ள மலசலகூடத்திற்கு சென்றுள்ள இந்த பெண்,  அதற்குள் ஏதோ ஒரு வகை குமிழ்தல் சத்தத்தைக் கேட்டுள்ளார். அடுத்த நொடியே மலசலகூட குழியிலிருந்து தோன்றிய அந்த மலைப்பாம்பு, அவரது தொடையை தீண்டியுள்ளது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், பாம்மை மலசலகூட குழிக்குள்ளேயே தள்ளியுள்ள அப்பெண், அதனை அதற்குள்ளேயே மூழ்கடித்துள்ளார்.
 
அந்த பாம்பு பார்ப்பதற்கு சுமார் 6 அடி நீளத்தையும் தனது கணவரின் முழங்கையின் அளவு அகலத்தையும் கொண்டிருந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு பாம்பு தீண்டிய இடத்தில் ஊசியேற்றியுள்ள வைத்தியர், அவருக்கு ஆபத்தில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அப்பெண் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது வீட்டில் உள்ள மலசலகூடத்தை பாவிக்கவே பயமாக இருக்கின்றது என்றும் அதற்கு பதிலாக பொது மலசலகூடத்தை பாவிக்கலாம் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தங்களது வீட்டு மலசலகூடத்துக்குள் இவ்வாறனதொரு பாம்பு வந்ததாகவும், ஆனால் அதனை அப்போதே தண்ணீர் ஊற்றி உள்ளே அனுப்பிவிட்டதாகவும் குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

அதேபோல குறித்த பெண்ணின் கணவரது நண்பரொருவரும் இப்பாம்பு, சாக்கடை கால்வாயில் உலாவியதை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .