2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உணவு தேடும் நாரைக்குஞ்சு

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மிகுந்த பசியால் வாடிய நாரைக் குஞ்சொன்று தனது தாயின் உணவுக்குழாய் வரை சொண்டை விட்டு இரைதேடிய காட்சிகள் அடங்கிய படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேற்படி நாரைக் குஞ்சு இரண்டு அல்லது மூன்று மாத வயதுடையது. தானாக உணவை தேடி உண்ண முடியாத நிலையிலேயே இவ்வாறு தனது தாயின் உணவுக்குழாய்க்குள் உணவை தேடி உண்டுள்ளது.

இக்காட்சிகளானது இந்தோனேஷியாவின், ஜகர்த்தா பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் படங்களாக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிகளை ஒளிப்படக் கலைஞரான டிக்கி ஓசியன் (வயது 38) என்பவரே படமெடுத்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி ஒளிப்படக் கலைஞர் விடுமுறை தினமொன்றில் தனது மகனொருவரை அழைத்துக்கொண்டு படங்கள் எடுப்பதற்காக மிருகக்காட்சி சாலைக்கு சென்றுள்ளார்.
 
சில படங்களை எடுத்துகொண்டு வீடு திரும்பும்போது இத்தகைய அரிய காட்சிகளை படமெடுக்க நேர்ந்தது.
 
இந்த காட்சிகளை பார்த்து எனது மகன் வியப்படைந்தார். நாரையை மகன் பார்க்கும்போது நாரையின்  சொண்டுக்குள் நாரைக் குஞ்சின் சொண்டு  திணிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால், தாய் நாரைக்கு என்ன நடக்கிறது என்பதையே நான் பார்த்துகொண்டிருந்தேன். சேய் நாரையின் சொண்டு தாய் நாரையின் வயிறு வரை சென்றுவிட்டது.

இதனை எப்படியாவது படம் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக அவை இருந்த இடத்திலிருந்து 15-20 மீற்றர் தொலைவிற்கு மெதுவாக சென்றேன். மேற்படி நாரைகளின் செயலை குழப்பிவிடாது அந்தக் காட்சிகளை புகைப்படமெடுத்தேன்.
 
அந்த நாரைகள் நான் அருகில் சென்றதை பார்க்கவேயில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X