2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குளிர்மை தேடி குதித்த இளைஞன்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெப்பத்தை தணிப்பதற்காக இளைஞன் ஒருவன் 50 அடி உயரத்திலிருந்து 25 அடி ஆழமுள்ள கால்வாயொன்றிற்குள் குதித்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரிட்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள மென்செஸ்டர் பாலத்திலிருந்தே மேற்படி இளைஞன் கால்வாயுக்குள் குதித்துள்ளார். இவ் இளைஞனுடன் சேர்ந்து மேலும் இருவர் அந்த கால்வாயுக்குள் குதித்துள்ளனர்.

மென்செஸ்டர் பகுதியில் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் பலர் குளிர்மையான பகுதிகளுக்கு தமது விடுமுறைகளை கழிப்பதற்காக சென்று வருகின்றனர். இந்நிலையிலே மேற்படி இளைஞனும் அவனது நண்பர்களும் குறித்த பகுதிக்கு சென்றுள்ளான்.

இதில் அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்த நிலையில் அந்த இளைஞன் தனது நண்பர்களுடன் பாலத்தின் மேல் நடந்துகொண்டிருந்துள்ளான். திடீரென அவன் கால்வாயுக்குள் குதிக்கும் காணொளிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ் இளைஞனுக்கு என்ன நேர்ந்தது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால், எப்படியும் இவ்விளைஞனின் கழுத்து பகுதி காயமடைந்திருக்குமென இக்காட்சியை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இளம் பராயத்தினர் தமது உயிரை பணயம் வைத்து செய்யும் செயற்பாடுகளை எண்ணி நான் அச்சமடைகிறேன். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படவிடாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களானது இளைஞர்களது உயிரை பறித்து விடும் என அந்நகரின் மாநகர மேயர் என் ஸ்டிவர்ட் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X