2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

இராட்சத முதலையின் நகர்வலம்

Kanagaraj   / 2014 ஜூலை 09 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இராட்சத முதலையொன்று நகர்வலம் வந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

21 அடி நீளமான இராட்சத முதலையே இவ்வாறு நகரை வளம்வந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய முதலை என்று அறியப்பட்ட முதலை, கடந்தவரும் பிலிப்பைன்ஸில் உயிரிழந்தது.

இந்நிலையில் அந்த இராட்சத முதலையின் நினைவாக அதே அளவுடைய முதலையின் மாதிரியொன்று பிலிப்பைன்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2000 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே, மாதிரி முதலையின் உடலை பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள முதலை பூங்காவிற்கு கொண்டு செல்வதற்காக வாகனமொன்றின் கூரையில் கட்டி நெரிசல் மிக்க வீதியில் பூங்கா பணியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
   
இதன்போது பணியாளர்கள் வாகனத்தின் மீதேறி மாதிரி முதலையை மிகவும் கவனமாக கொண்டு சென்றுள்ளனர்.

வாகனத்தில் சென்ற முதலையை பார்த்து பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .