2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

உயிர் காத்த நண்பன்

Kanagaraj   / 2014 ஜூலை 09 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


முடக்கு வாதத்தால் அவதியுறும் தனது உயிர் நண்பனை காப்பாற்றுவதற்காக எலுமிச்சை பானத்தை தயாரித்து விற்பனை செய்து பணம் சேகரித்து 7 வயது சிறுவனொருவன் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
 
கனடா, மேப்பில் ரிட்ஜ் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த க்சின் கெலன்டர் எனும் 7 வயதுடைய சிறுவனே தனது சக வயது நண்பனை காப்பாற்றுவதற்காக இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

முடக்கு வாதத்தால் பாதிப்புற்றிருக்கும் சிறுவன், மிகவும் வேதனைத்தரக்கூடிய பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சைகளை பெற்றுக்கொண்டால் ஊன்றுகோல் ஒன்றை பயன்படுத்தி நடக்க முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் முழுமையாக நடக்கவேண்டுமாயின் நியூ ஜேர்சி எனும் நகரில் உள்ள வைத்தியசாலையில் மாத்திரமே செய்யக்கூடிய சத்திர சிகிச்சையை செய்வது அவசியம் என்றும் அதற்கு 20 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அவசியம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது நண்பனை முற்றாக குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் க்சின் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன் பின்னரே எலுமிச்சைப் பானத்தை தாயரித்து ஒரு மலிகைக் கடைக்கு முன்னால் வைத்து விற்பனை செய்து பணத்தை திரட்ட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை யோசித்துள்ளான்.

குறித்த பானத்தை விற்பனை செய்யும் போது, எனது நண்பனை காப்பாற்ற பணம் சேர்க்க எனக்கு உதவி செய்யுங்கள். அவர் மிகவும் நல்லவர் என கூறி விற்பனை செய்துள்ளார்.

20 ஆயிரம் அமெரிக்க டொலர்களை திரட்ட வேண்டும் என எண்ணி விற்பனை செய்திருந்தாலும் அந்த முயற்சி முடியும் கட்டத்தில் 52,051 அமெரிக்க டொலர்களை திரட்டப்பட்டியுள்ளான்.
 
எனது நண்பனுக்கு மிகவும் வலி தரக்கூடிய உடற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவருக்கு வலி அதிகமாக இருக்கும் போது அவருக்கு ஆறுதலாக நான் அருகில் இருப்பேன். தற்போது செய்யப்போகும் இச்சிகிச்சை எனது நண்பனை முழுமையாக குணப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று க்சின் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .