2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் நிர்வாணமாக ஓடிய பெண்

Kogilavani   / 2014 ஜூலை 28 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையொன்றில் பெண்ணொருவர் காரில் இருந்து குதித்து நிர்வாணமாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ரஷ்யாவில் உபா பகுதியில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து பொலிஸார் கார் ஒன்றை வழி மறித்து காருக்கான ஆவணங்களை கேட்க முயன்றுள்ளனர். இதன்போது அக்காரில் இருந்து பாதணிகளை மட்டும் அணிந்த நிலையில் வெளியில் இறங்கிய பெண், நிர்வாண கோலத்தில் மிக வேகமாக நடந்துள்ளார்.

இந்நிலையில் அதர்ச்சியடைந்த பொலிஸார், அப்பெண்ணை பிடிக்க முயன்றபோதும் அவர் சாலையை கடந்து மறுபக்கமாக சென்றுவிட்டார்.
பொலிஸாரின் அயராத முயற்சியில் ஒரு வழியாக பிடிக்கப்பட்ட அப் பெண் போதை மற்றும் மதுபாவனை பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் பயணித்த போது எதிரே வந்த காரொன்று இவரை இலேசாக மோதி சென்றதில் இவருக்கு சிராயப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதிஷ்டவசமாக அக்கார் மிகவும் வேகமாக பயணிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காரின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் அவர் மீது எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்க முடியாததால் அவரை எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .