2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அறை நடுவில் நீச்சல் தடாகம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாங்கமுடியாத வெப்பநிலையில் சிக்கித்தவித்த மாணவர் குழுவொன்று, தங்களது சூட்டைத் தணிப்பதற்காக தமது அறையின் நடுவில் நீச்சல் தடாகமொன்றை அமைத்துள்ளது.

இந்த விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் உஹான் மாகாணத்தில் வெப்பமான காலநிலை நீடித்து வருகின்றது. 50 பாகை செல்சியஸ் வெப்பநிலையை இம்மாகாணம் தற்போது எட்டியுள்ளது.
  
இதனால், வெப்பநிலையைத் தாங்கமுடியாத அம்மாகாணத்திலுள்ள  பல்கலைக்கழகமொன்றின் மாணவர்கள், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இப்பல்கலைக்கழகத்தில் குளிரூட்டப்பட்ட அறை வசதிகள் கிடையாது. இந்நிலையில் சூட்டை தணிப்பதற்காக அம்மாணவர்கள் தமது அறையின் நடுவில் சிறிய நீச்சல் தடாகமொன்றை அமைத்து அதில் அமர்ந்துகொண்டு அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நீச்சல் தாடகத்திற்கென விதிமுறைகள் எதுவும் கிடையாது, ஆனால், நீந்தவோ, விளையாடவோ முடியாது. நீச்சல் தடாகத்திலுள்ள நீர் சூடாகினால் அதனை வெளியேற்ற வேண்டிவரும் என மேற்படி நீச்சல் தடாகத்தை நிர்மாணித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X