2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

செடில் மனிதனுக்கு தடை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


செடில் குத்திய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபருக்கு டுபாய் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

டுபாய் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மேற்படி நபர் அகோரமான முறையில் பச்சை குத்தியிருப்பதுடன் உடல் முழுவதும் செடில் குத்தியுள்ளார்.

ரால்ஃப் பச்சோல்ஸ் எனும் 55 வயதுடைய நபரே இத்தகைய அகோர தோற்றத்துடன் காணப்படுகின்றார். இவர் சூனியக்காரராக இருக்காலாம் என்ற காரணத்தினாலேயே இவருக்கு டுபாய் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 450 செடில்களை உடல் முழுவதும் குத்தியுள்ள இந்நபர், உடலில் அதிக துளைகளை கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனைக்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'முதலில் எனது கடவுச்சீட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த அதிகாரி எனக்கு உள்ளே போக தடைவிதிப்பதாக தெரிவித்தார்.

நான் ஏன்? என்று கேட்டவுடன், நீங்கள் சூனியக்காரர் என்ற சந்தேகம் எமக்கிருக்கின்றது. இவ்வாறான வேடங்களுடன் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது  என்று அந்த அதிகாரி தெரிவித்தார்' என மேற்படி நபர் கூறினார்.

செடில்:- பிராத்தனைக்காக முதுகின் தோலில் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப்பெற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி.


  Comments - 0

  • subburaj Monday, 25 August 2014 10:58 AM

    பயமாக இருகிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .