2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அலைபேசியை முடக்க புதிய முறை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது அலைபேசி அழைப்புகளை மகன் அலட்சியப்படுத்துகிறான் என்ற காரணத்தினால் விரக்தியடைந்த தாயொருவர், பிள்ளைகளது அலைபேசிகளை முடக்குவதற்கு புதியதொரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹொஸ்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷெரோன் ஸ்டேன்டிபேர்ட் எனும் பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  இவர்கள் இருவரும் தாயின் அலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் இதனை எப்படியாவது முடக்கவேண்டுமென்று திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து சில தொழில்நுட்பவியளாலர்களின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தும் போது அவ் அழைப்பை பிள்ளைகள் அலட்சியப்படுத்துவார்களாயின் அவர்களுடைய அலைபேசியை கடவுக்குறியீட்டை பயன்படுத்தி முடக்க முடியும்.

முடக்கப்பட்ட தொலைபேசியை மீண்டும் செயற்படுத்த வேண்டுமாயின் பெற்றோரிடமிருந்தே பிள்ளைகள் கடவுக்குறியீட்டை (பாஸ்கோட்) பெறவேண்டும். 'ஆனாலும் இந்த முறைமையை குறித்தவொரு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் அலைபேசிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்' என்று இத்தொழிநுட்பத்தை கண்டுபிடிக்க உதவிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .