2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சமயோசிதத்தால் தப்பிய சிறுவன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீதியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு மேலாக காரொன்று  சென்ற போதிலும் அச்சிறுவன் தெய்வாதீனமாக உயிர்பிழைத்த சம்பவமொன்று சீனாவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு, ஷெங்டொங் மாகாணத்திலுள்ள ஜினிங் நகரத்திலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் சுத்தியல் ஒன்றையும் சில சிறிய பலகைத்துண்டுகளையும் வைத்துக்கொண்டு தனது வீட்டின் முன்னால் உள்ள வீதியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அப்போது வீதியில் சிகப்பு நிற காரொன்று வந்துள்ளது. காரின் சாரதி, வீதியில் சிறுவனொருவன் அமர்ந்திருந்ததை கவனிக்கவில்லை. சிறுவனும் வாகனத்தை கவனிக்கவில்லை.

அந்த கார் சிறுவனுக்கு அருகில் வந்தபோது, சிறுவன் அச்சமடைந்து தனது தலையையும் உடலையும் வீதியுன் ஒட்டிப் பணித்துள்ளான். என்ன அதிசயம். வாகனம் சிறுவனை கடந்து சென்ன பிறகும் கூட சிறுவன் சாதாரணமாக எழுந்து தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளான்.

குறித்த வீதியில்  பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வீ கமராக்களில் பதிவான இந்த அதிசய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த காரின் காரின் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளியின் அளவு அதிகமாக இருந்தனாலும் சிறுவனது உடல் மிகவும் சிறியதாக இருந்ததனாலுமே சிறுவன் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .