2025 மே 12, திங்கட்கிழமை

பழி தீர்த்த பாம்புத்தலை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தலையை துண்டித்தவரை பாம்பு ஒன்று பழிவாங்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் வடமேற்கு பிராந்திய மக்கள் பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்களை கொன்று தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பி உண்பார்கள். அதிலும் பாம்பு மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு கொள்ளை பிரியமாம்.

பாம்புகறி  மற்றும் பாம்பு சூப் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை. இதனால் இந்த பகுதியிலுள்ள பல உணவகங்களில் ஏராளமான பாம்புக்கறி கிடைக்கும்.

இந்நிலையில், அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு ராஜநாகம் ஒன்று உயிருடன் கொண்டு வரப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பதற்காக அந்த ராஜநாகத்தை உணவகத்தின் சமையற்காரர் பெங் பென் என்பவர் வெட்டியுள்ளார்.

பாம்பை துண்டுகளாக வெட்டிய பின்னர், உடலை எடுத்து சூப் வைத்துள்ளார். துண்டாக வெட்டப்பட்ட தலை அருகேயே துடித்துக் கொண்டிருந்தது. 20 நிமிடத்திற்கு பின்னர் சூப் தயாரானவுடன்  கழிவுகளை குப்பையில் வீசுவதற்காக பாம்பின் தலையை எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது தான் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. துடித்துக்கொண்டிருந்த ராஜநாகத்தின் தலைப்பகுதி, அந்த சமையல் காரரின் கையை திடீரென கௌவ்வி கடித்துள்ளது. பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் உடனடியாக  ஏறிய நிலையில் அவர் கீழே விழுந்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் உயிருக்காக போராடித் துடித்துக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் வழியிஷேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொதுவாக ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகள் தலை வெட்டப்பட்ட பின்னர் ஒரு மணி நேரம் வரை உயிருடன் துடித்துக்கொண்டு இருக்கும். இதனை சரியாக கவனிக்கமல் சமையல்காரர் அதனை எடுக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.( தட்ஸ் தமிழ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X