Gavitha / 2015 மார்ச் 18 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயல் வீட்டிலுள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்பது சிலருக்கு பொழுதுபோக்கு எனலாம். ஆனால், அயல் வீட்டுப்பக்கமே இனி பார்க்கக்கூடாது என்று நினைக்குமளவுக்கு சில சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.
நபரொருவர் அவரது வீட்டு வாசலில் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதன் காரணத்தினால், அயலவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கிய சம்பவம், அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் ஒரு தடவை மாத்திரம் நடந்திருந்தால் பரவாயில்லை. கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருகின்றது என்றால் நம்புவீர்களா?
புளோரிடா மாநிலத்திலுள்ள வட கரோலினாவின் நகரமொன்றான சாலொடில் எனும் பிரதேசத்திலுள்ள அட்ரியன்னா ஹாரிஸ் என்பவமரின் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அட்ரியன்னா ஹாரிஸ் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது, 'நாம் இந்த சம்பவத்தினால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். கடந்த 10 வருடகாலமாக எமது அயல் வீட்டில் உள்ள நபர் இவ்வாறு நிர்வாணமாக நின்று வருகின்றார். இந்த நபர் கிழமை நாட்களிலேயே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
நாம் இது தொடர்பாக 2005ஆம் ஆண்டிலிருந்து 30 தடவையாவது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருப்போம். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நபரால் எனது மகள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே பயப்படுகின்றார் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த நபர் நிர்வாணமாக நின்றதை தவிர, வேறு எவ்வித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. வட கரோலினாவின் சட்டத்தின் படி, அவர்களுக்கு சொந்தமான வீட்டில் யாரும் நிர்வாணமாக இருக்கமுடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனராம்.
குறித்த நபர் நிர்வாணமாக நிற்பது புகைப்படமாக்கப்பட்டு, அனைத்து வீட்டு உரிமையாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
29 minute ago
34 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
45 minute ago
52 minute ago