Kogilavani / 2015 ஜூன் 29 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமைப்பதற்காக விலைகொடுத்து வாங்கப்பட்ட இறைச்சி துண்டொன்று அசைந்துள்ளதுடன் அவ் இறைச்சி பகுதிக்கு உயிரிருந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, சன்டொங் மாகாணத்தைச் சேர்ந்தவர் செங். இவர், இறைச்சிக் கடைக்கு சென்று மாட்டிறைச்சியை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்த அவர், அதனை சிறிய துண்டுகளாக வெட்டுவதற்கு எடுத்த போது அவ்விறைச்சுத்துண்டு அசைந்துள்ளது. அதனை உற்று அவதானித்த போது அதற்கு உயிர் இருந்ததை கண்டு அவர் அதிர்ந்துள்ளார்.
'மாட்டை அறுக்கும்போது நரம்பு மண்டலங்கள் உடனடியாக செயலிழந்து விடும். ஆனால், தசைகள் நரம்பு நுனிகளில் துடித்த வண்ணமிருக்கும். ஏனெனில் நரம்பு நுனிகள் இறக்கவில்லை. இவை சிறிது நேரங்களின் பின்னரே இறக்கும்' என உள்ளூர் விலங்குகள் சுகதார திணைக்கள நிபுணர் எல்.வி.சுவேன் தெரிவித்தார்.
காலை 8 மணியளவில் இறைச்சியை கொண்டு வந்ததாகவும் பின்னர் 9 மணிக்கே வெட்ட தொடங்கியதாகவும் செங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறைச்சி அசையும் காட்சிகள் சீசிடிவி கமாராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago