2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

300 அடி கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமார் 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் 3 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின், பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சுலிகேரி கிராமத்தில் தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வராததால் கைவிடப்பட்டிருந்த சுமார் 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை (03) திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளான்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவனது உறவுக்கார சிறுவன் கொடுத்த தகவலின்பேரில், அயவவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.  இதனையடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை என்பன இணைந்து மீட்பு பணியை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து குறித்த ஆழ்துளை கிணற்றுக்கு குழாய் மூலம் ஒக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளதுடன் இரவு பகல் பாராமல் மீட்பு பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் கிணற்றுக்குள் சி.சி.டி.வி காமிராவை நுழைத்து, சிறுவன் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்த சிறுவன், கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தற்போது 160 ஆவது அடி ஆழத்தில் சிக்கியுள்ளதுடன் சிறுவனுக்கும், மீட்பு குழுவினருக்கும் நடுவே அதாவது சுமார் 150வது அடியில் கல் மற்றும் மண் சிக்கிக்கொண்டுள்ளது. இந்த கல் அல்லது மண் கீழே விழுந்தால் சிறுவனின் தலையில் இரத்த காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதுடன் அதிர்ச்சியில் சிறுவன் மேலும், கீழே ஆழமான பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. (தட்ஸ்தமிழ்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .