2024 ஜூன் 17, திங்கட்கிழமை

34 வயதில் பாட்டி

Editorial   / 2024 மே 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்.
சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. 

சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஷிர்லி லிங்கிற்கு 17 வயதில் முதல் திருமணம் ஆன நிலையில், 3 முறை மறுமணம் செய்த அவர், தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு தான், கடந்தாண்டு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், இளம் வயதில் பாட்டி ஆன இன்ஸ்டா பிரபலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X