2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

4 வயது சிறுமி சுட்டதில் சகோதரன் பலி

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு வயது சிறுமியொருவர் துப்பாக்கியால் சுட்டதில் அதே வயதையுடைய அவளது சகோதரன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மிச்ஹிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் 4 வயது சிறுவன், சமவயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சிறுவன் ஓடி மறைந்து கொள்ள, சிறுமி அவனை தேடி வந்துள்ளாள். கட்டிலுக்கு அருகே சிறுவன் ஒளிந்திருப்பதைப் பார்த்த சிறுமி, கட்டிலின் அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டுத் தனமாக கையை உயர்த்துமாறு கூறியுள்ளார்.

ஆனால், தவறுதலாக அவளது கை துப்பாக்கியை  அழுத்தி விட, அதிலிருந்து வெளியான தோட்டா சிறுவனின் உயிரை மாய்த்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .