Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த பஸ் சாரதியொருவர் அந்நாட்டு தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் 23 லட்சம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 41 கோடி இலங்கை ரூபா) வென்றபோதிலும் தான் விரும்பும் சாரதி தொழிலுக்கே மீண்டும் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சோர்லியை பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு பிள்ளையின் தந்தையான கெவின் ஹால்ஸ்டீட் (வயது 47) என்பவர் கடந்த மார்ச் மாதம் தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் ஜக்பொட் பரிசுத் தொகையை வென்றார்.
ஆனால் அவர் தற்போது போல்டன் மற்றும் பிரெஸ்டனுக்கான பாதைகளில் ஓடும் 125 ஆம் இலக்க பஸ்ஸை மீண்டும் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இவர் இந்த வழித்தடத்தில் ஓடும் பஸ்ஸில் 1994 ஆம் ஆண்டிலிருந்து செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனக்கு லொத்தர் மூலம் பெருந்தொகை பணம் கிடைத்தாலும் தான் பல வருடங்களாக மேற்கொண்டு வரும் சாரதி தொழிலையும் அதனால் ஏற்பட்ட நண்பர்களையும் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நான் பஸ்ஸில் பணியாற்றாமல் இருந்தது குறித்து கவலையடைந்தேன். நீங்கள் கடந்த 17 வருடங்களாக ஒரே வேலையை தொடர்ந்து செய்து வந்தபின் திடீரென்று அதை நிறுத்தினால் அது மிகவும் கடினமானதாக அமைந்துவிடும்.
உண்மையில் இது என்னை பரிகாசிக்கச் செய்கிறது. ஏனைய எல்லாவற்றையும்விட எனது நண்பர்களை இழந்துள்ளேன். நான் ஓரிரு மாதங்களில் மீண்டும் எனது சாரதி தொழிலுக்கு வருவேன். ஆனால் நாளாந்த அடிப்படையில் விரும்பியவேளையில் பணியாற்றுவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
எனது வாழ்க்கையானது மாறியிருக்கலாம். ஆனால் நான் சிறிதும் மாறவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெவின் ஹால்ஸ்டீட் தனது வேலைக்கு மீண்டும் திரும்புவதை காண அவரது நண்பர்கள் ஆவலாகவுள்ளனர்.
' கெவின் மிக அமைதியான மனிதர். முன்போல் இப்போதும் தனது தொழிலில் அவர் மிக ஆர்வமுடையவர் ' என அவருடன் முன்னர் பணியாற்றிய ஊழியர் அன்டி ஸ்டுவர்ட் தெரிவித்துள்ளார்.
Jesi Tuesday, 22 February 2011 07:08 PM
நீ சூப்பர் டா மச்சி ... i like that the way you have thought... .நம்ம ஊர்ல 10 rupess விழுந்தா போதும்..they wish climb to sun..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
2 hours ago
14 May 2025