2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

5 அடி உயரமான முன்சக்கரத்தையுடைய விநோத மிதி வண்டி

Kogilavani   / 2011 நவம்பர் 09 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொழுதுபோக்கிற்காக 5 அடி உயரமான முன் சக்கரத்தையுடைய மிதி வண்டியொன்றைச் சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உருவாக்கியுள்ளார்.

சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்சன் எனும் ஊரைச் சேர்ந்த சாங் லியான்ஜன் என்பவரே இவ்வாறான விநோத மிதி வண்டியை உருவாக்கியுள்ளார்.

வழமைக்கு மாறான இந்த மிதிவண்டிக்காக அவர் 1,800 ஸ்ரேலிங் பவுண்களை செலவளித்துள்ளார்.

இம்மிதிவண்டியில் பெரிய விளக்கு, வாகன ஒலிபெருக்கி, மற்றும் நான்கு சிறிய சக்கரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவர் டிரக்டர் வண்டியின் 7 அடி உயரமான சக்கரத்தை இதற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளார். ஆனால் அது பாரமாகவும் அதே நேரத்தில் செலுத்துவதற்கு கடினமானதாகவும் இருக்குமென எண்ணி சிறிய முன்சக்கரங்களை கொண்ட மண்வாரியொன்றை உருவாக்குவதற்கு எண்ணினார்.

'எப்படியிருப்பிருனும் சக்கரங்கள் அளவில் வித்தியாசமானவை. அவை மிதி வண்டியை  செலுத்துவதற்கு பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்' என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .