2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

50 வயது பெண்ணை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு கூறும் 17 வயது சிறுவன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் 17வயது மாணவன் ஒருவன் தான் காதலித்து வரும் 50 வயது பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த பையனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மீரட்டைச் சேர்ந்த தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தனது முறைப்பாட்டில், 'நான் 50 வயதாகும் பெண் ஒருவரை காதலிக்கிறேன்; அவருடன் ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன்;. அவரையே மணக்க விரும்புகிறேன்;. அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்;. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணுக்கு 8 பிள்ளைகள் இருப்பதையும் அம்முறைப்பாட்டில் சிறுவன் தெரிவித்துள்ளான்.

முறைப்பாட்டை கண்டு அதர்;ச்சி அடைந்த பொலிஸார் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். எட்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண், 'வாழ்ந்தால், இவரோடுதான் வாழ்வேன்; இல்லையேல், இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்வோம' என்றார்.

'அந்தப் பள்ளி மாணவனுக்கு, வயது, 17 தான் ஆகிறது. திருமணம் செய்து கொள்ளும் வயது இல்லை எனவே, அவனை மறந்துவிடு' என பொலிஸார் அப்பெண்ணிடம் அறிவுரை கூறினர்.

அதை ஏற்றுக் கொள்ளாத அப்பெண், கோபத்தில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினார். அங்கு கூடியிருந்த, மாணவனின் உறவினர்கள் அந்த பெண்ணை நையப்புடைத்தனர். பொலிஸார் தலையிட்டு அவரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.

'திருமண வயதாகும் வரை காத்திருப்போம்' என, கூறியுள்ள அந்த காதலர்களுக்கு, பொலிஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

  Comments - 0

  • shiva Wednesday, 19 February 2014 07:57 PM

    காதாலுக்கும் காமத்துக்கும் வயது இல்லை என்ற தியரியை நிரூபித்து உள்ளனர் இந்த காதல் ஜோடி, வாழ்த்துக்கள்.....!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .