2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

74 வயதில் தந்தையாகவுள்ள தாத்தா

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரிட்டனைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது 3 ஆவது மனைவியின் மூலம் 7 ஆவது குழந்தைக்கு தந்தையாகவுள்ளார்.

மைக் அமிடேஜ் என்ற வயோதிபரே இவ்வாறு தனது 74 ஆவது வயதில் தந்தையாகவுள்ளார்.

இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளின் மூலம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயது ஆகிறது.

மேலும் இவருக்கு 10 பேர பிள்ளைகளும் உள்ளனர்.  இந்நிலையில் இவர் 32 வயதுடைய தனது 3 ஆவது  மனைவியான லின்ட்சே மூலமாக 7 ஆவது குழந்தைக்கு தந்தையாக  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வயோதிபர் தனக்கு 7ஆவது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வி தவறானது. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என அமிடேஜ் தெரிவித்துள்ளார்.

லின்ட்சே மூலமாக இன்ன் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .