2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

82 வயதில் மனைவி தேடும் தாத்தா

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று முறை விவகாரத்து செய்த வயோதிபர் ஒருவர் தனது 82 வயதில் 'மனைவி தேவை' எனும் விளம்பர பலகையைய கழுத்தில் மாட்டிகொண்டு பொது இடங்களில் நிற்கும் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாண்டி மிக்கோலச் என்ற அமெரிக்கரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் 40 வயதிற்குள் மூன்று முறை விவகாரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 40 வருட காலத்தை தனிமையில் கழித்துவிட்டதால் வாழ்ககையை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டுமென தான் நன்கு உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமையில் வாடும் தமக்கு நல்ல ஒரு துணை தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு மனைவியாக விரும்புவர்கள் 60 வயதை கடந்து இருக்க வேண்டும் என்பதோடு, நூல்களை தேடி கற்பவராகவும்  நகைச்சுவை உணர்வு உள்ளவராகவும் ஒரே நகரத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

'பலர் தமது 20 அல்லது 25 வயதுகளில் பல்வேறு காரணங்களுக்காக மனைவியை தேடுகிறார்கள். நான் தோழமைக்காக மனைவி தேடுகிறேன்' என அவர் தனது கழுத்தில் தொங்கவிட்டுள்ள விளம்பர பலகையில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .