2025 மே 13, செவ்வாய்க்கிழமை

84 வயது மூதாட்டிக்கு 44 வயது மிக்க கற்குழந்தை

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

84 வயது மூதாட்டியின் வயிற்றிலிருந்து 44 வயது மிக்க கற்குழந்தையை எக்ஸ்ரேயினூடாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரேசிலைச் சேர்ந்த மூதாட்டியொருவரே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் கடந்த வாரம் கடுமையான வயிற்றுவலி மற்றும் தலைச்சுற்று காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரது வயிற்றில் 44 வருட பழமைமிக்க குழந்தையொன்று உறைந்த நிலையில் கல்லாகி இருப்பதை எக்ஸ்ரே படம்மூலம் அறிந்துகொண்டுள்ளனர்.

தான் 44 வருடங்களுக்கு முன்னர் கருதரித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத மேற்படி பெண், வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது வயிறு பெருக்காமல் இருந்துள்ளது. கருவில் குழந்தை அசைவது தடைப்பட்டுள்ளது. இதனை உணர்ந்த அப் பெண் கரு கலைந்துவிட்டதாக நினைத்துகொண்டதாக போர்டோ தேசிய வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் ஜெஸின்ரியா சர்வியாக கர்டா அந்நாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 
 
'எப்படியிருப்பினும் குழந்தை கருவிலே இறந்த நிலையில் உறைந்து கல்லாகியுள்ளது. அது கடந்த 44 வருடங்களாக அப்பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே இருந்தள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கதிர்வீச்சு பரிசோதனைக்கூடாக கற்குழந்தையை கண்டறிவது சாத்தியமற்றது. இதனை நாங்கள் எக்ஸ்ரேக்கூடாகவே கண்டறிந்தோம். 

இப்பரிசோதனைக்கூடாக அக்குழந்தையின் முகம், கைகள், மற்றும் கால்கள் கண்டறிவது சாத்தியமானது.
ஆனாலும் அப்பெண்ணுக்கு அக்குழந்தையை கருவிலிருந்து அகற்றுவதற்கு எண்ணமில்லை.

அப்பெண்ணின் எதிர்காலம் கருதி அவரது மனநிலையை மாற்ற முடியும்' என அவர் மேலும் கூறியுள்ளார்.

அக்கற்குழந்தை குறித்து மேலும் தகவல்களை பெற்றுகொள்வதற்காக இன்னும் பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்பே அப்பெண்ணின் உறவினர்களிடம் இது குறித்து தெரியப்படுத்த உள்ளோம். உறவினர்கள் விரும்பினால் அப்பெண்ணுக்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

11000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இதுபோன்ற கல்குழந்தைகள் உருவாவது இயற்கைதான் என்று  மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தை கருத்தரித்த பிறகு கரு பாதிக்கப்பட்டால் இவ்வாறு கருவில் உள்ள குழந்தை கால்சியம் அமில உப்புகளால் பாதிக்கப்பட்டு கல்லாக மாறிவிடுவது மிகவும் அரிதானது என்றும் அதற்கு அறிவியலில் லித்தோபிடியன் என்றும் சொல்லப்படுகிறது.

இதுவரையில் இதுபோன்று 291 சம்பவங்கள் மருத்துவத்துறையில் பதியப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் மேடம் கோலம்பே சாத்ரி என்ற 68 வயது பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு அவர் 1582இல் இறந்த பின் கல்குழந்தை அவருடைய வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது.

அவர் 28 வருடங்களாக வீங்கிய வயிற்றுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X