Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ATM‘ இயந்திரமொன்றில் இருந்து ‘சிறுவர்கள் விளையாடும் போலி நாணயத்தாள்கள் வந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ‘கிஷன்‘ என்பவர் உத்திர பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரமொன்றில் இருந்து 5,000 ரூபாயை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அதில் `Full of fun` எனக் குறிப்பிடப்பட்ட சிறுவர்கள் விளையாடும் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்த வீடியோவொன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ”போலி நாணயத்தாளை ATM இயந்திரம் ஏற்றுக்கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது போன்ற சம்பவங்கள் பல முறைகள் இடம்பெற்றுள்ளன எனவும், இச்சம்பவத்துக்கு குறித்த வங்கியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வங்கி சார்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
15 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
28 minute ago
30 minute ago