2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அச்சமூட்டும் விநோத உயிரினம்; பீதியில் மக்கள்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் குளத்தில் அச்சமூட்டும் வகையில் காணப்பட்ட விசித்திர உயிரினமொன்றைக்  கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இது பார்ப்பதற்கு முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான பற்களைக் கொண்டு காணப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் ‘இவை அலிகேட்டர் கார்ஃபிஷ்‘  எனப்படும்  மீன்கள் எனவும் இவை வட அமெரிக்காவில் அதிகளவில் காணப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவை எவ்வாறு இங்கு வந்துள்ளன  என்பது குறித்து வனத்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இவை ஏனைய மீன்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வல்லுனர்களின் கூற்றுப்படி, அலிகேட்டர் மீன்களின் ஆயுட்காலம் 18-20 ஆண்டுகள் இருக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .