2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அண்ணன் - தங்கை திருமணம்

Mithuna   / 2024 பெப்ரவரி 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆண்கள் தங்கள் அத்தை மகள், மாமன் மகள், அக்கா மகள் போன்ற முறை பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பாரம்பரியத்தில் குடும்பம் மற்றும் திருமண முறை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஒரே மாதிரியான உறவு முறைகள் தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இந்தியாவை சேர்ந்த பழங்குடியின சமூகம் ஒன்றில் ஆண்கள் தங்கள் சகோதரிகளை திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 “துருவா” என்ற பழங்குடி சமூகம் ஒன்று உள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்த மக்கள் சாதாரண மக்களை விட சற்று வித்தியாசமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கின்றனர்.

துருவா பழங்குடி இனத்தின் வழக்கம் படி ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண்களும், பெண்களும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஆதாவது அண்ணன் - தங்கை, அக்கா- தம்பி ஆகிய உறவு முறைகளில் திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

இங்கு ஏன் இப்படிஒரு கலாச்சாரம் பின்பற்றபடுகிறது என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. ஆனால் யாரேனும் தங்கள் சகோதர, சகோதரிகளை திருமணம் செய்ய மறுத்தால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த பழங்குடியின சமூகத்தின் கலாச்சாரம் குறித்து கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் தங்கள் இனத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக அவர்கள் அத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .