2025 மே 03, சனிக்கிழமை

ஆண்குறியை தீயில் சுட்டுக் கொண்ட போட்டியாளர்

Editorial   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



 பிக் பாஸ், சர்வைவர் ரியாலிட்டி ஷோவை எல்லாம் தாண்டி வெளிநாடுகளில் நிர்வாணமாக போட்டியாளர்கள் பங்கேற்கும் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அதில், உலகளவில் பிரபலமான Naked and Afraid ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர் எதிர்பாராத விதமாக தனது ஆண்குறியை சுட்டுக் கொண்ட நிலையில், தற்போது என்ன ஆச்சு என்பதை விளக்கி இருப்பது உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வலி இருக்கே வலி என போட்டியாளர் சாம் மவுஸர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பலரையும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியாத அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

காட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் நிர்வாணமாக அனுப்பி விட்டு, அவர்கள் அங்கே எப்படி சர்வைவ் பண்றாங்க என்பதை கேமராவை வைத்து கண்காணித்து அதை ஷோவாக போட்டு உலக ரசிகர்களை பார்க்க வைத்து காசு பண்ணும் நிகழ்ச்சி தான் இந்த Naked and Afraid ரியாலிட்டி ஷோ.

இதில், கலந்து கொண்ட Sam Mouzer எனும் போட்டியாளருக்குத் தான் இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. டிஸ்கவரி பிளஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 15ன் போட்டியாளர் சாம் மவுஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயதான சாம் மவுஸர் லில்லி ஜாமர்பண்ட் எனும் பெண் போட்டியாளருடன் முழு நிர்வாணமாக தனிக்காட்டில் சுற்றித் திரிந்து சர்வைவ் பண்ணி வந்த நிலையில், சமீபத்தில், நடந்த எதிர்பாராத விபத்தால் அவரது ஆண்குறி லேசாக எரியும் சூழ்நிலை உருவானது.

காட்டில் பிறந்த மேனியாக விலங்குகளுடன் விலங்காக சுற்றித் திரிந்த போட்டியாளர்கள் இருவரும் இரவு நேரத்தில் தங்கள் கூடாரத்திற்கு வந்து குளிர் காரணமாக கேம்ப் ஃபயர் போட்டு தூங்கி உள்ளனர். குளிருக்கு இதமாக இருக்குமேன்னு நம்ம சாம் நெருப்புக்கு பக்கத்தில் படுத்திருந்த நிலையில், அந்த சம்பவம் நல்லா தூங்கிட்டு இருந்த நம்ம சாமை சூடு போட்டு எழுப்பி கதற வைத்து விட்டது.

தெரியாத்தனமாக தனது ஆண்குறியை சாம் மவுஸர் சுட்டுக் கொண்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்துள்ளனர். சில வாரங்கள் சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில், தற்போது நல்ல வேளையாக தனது ஆண்குறி வேலை செய்வதாக சாம் மவுஸர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளது அவரது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X