Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் மேக்கப் போட்டு வந்திருக்கிறார். இப்போது அந்தப் பெண்ணுக்கு மோசமான சருமப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளாராம். இதற்கு அவர் செய்த ஒரு மேஜர் தவறே முக்கிய காரணம். இது குறித்த தகவல்களை அவரே வேதனையோடு பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் நியோயோமியான். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தினசரி மேக்கப் போட்டு வந்துள்ளார். ஆனால், அவர் ஒரு பெரிய தவறை செய்துவிட்டாராம். அதாவது எப்போதும் மேக்கப் போட்டால் அதை நாளின் முடிவில் சரியாக அகற்றிவிட வேண்டும். ஆனால், இவர் மேக்கப்பை அகற்றாமலேயே இருந்துள்ளார்.
இதனால் அவருக்குக் கடுமையான அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட காலம் மேக்கப் போடுவது+ அதை முறையாக அகற்றாமல் விட்டதால் இப்போது அவர் கடுமையான சருமப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். இதனால் "ஹார்மோன் முகம்" என்ற பாதிப்பை அவர் எதிர்கொண்டு இருக்கிறார்.
அவரது முகம் வீங்கியும், சிவந்து போயும், தடிப்புகளுடன் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பல நாட்கள் சரும அலர்ஜி இருந்தால் அது இப்படித் தான் இருக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அந்தப் பெண் பதிவிட்ட வீடியோ இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆகியுள்ளது.
37 வயதான நியோயோமின் தனது 15 வயதில் இருந்தே மேக்கப் போட ஆரம்பித்துவிட்டாராம். 22 வருடங்களாகத் தினமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடக்க நாட்களிலேயே அவருக்குச் சில க்ரீம்கள் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முகப்பரு கிரீம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.
3 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago