2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றல்ல இரண்டல்ல ஆறு....

Freelancer   / 2023 நவம்பர் 08 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் என்றாலே அதில் குடும்பம் கடமைகள் என பல பொறுப்புக்கள் நம்மை சூழ்ந்து விடும் அதற்காகவே பவரும் திருமணம் என்றால் அஞ்சுவார்கள்.

ஆனால் பிரேசிலில்  ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். கேட்பதற்கு ஆச்சிரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.

இந்த நபர் 9 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. அவர்களில் 4 பேரை விவாகரத்து செய்து விட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் பிரேசிலில் நாட்டில் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும். இருந்தாலும் அவர் தனது 6 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தனது மனைவிகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைபடங்கள், காணொளிகளை சமூக வளைதளங்களில் பதிவு செய்தும் வருகிறார்.

800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அவரது வீட்டில் ஒப்பனையறை, நீச்சல் அறை போன்ற பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

மேலும் தனது 6 மனைவிகளுக்கும் சமமாக நேசிப்பதோடு, அவர்களுக்காக எதையும் செய்வதாகவும் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஒன்றாக வாழும் வீட்டிற்கு காதல் மாளிகை என்ற பெயரையும் வைத்துள்ளார்களாம். M 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X