2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஓடும் காரில் பட்டாசு வெடித்த இளைஞர்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 01 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக   அங்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தடையை மீறி வெடித்தால் 200  ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியதால்,  தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில்  டெல்லி குருகிராம் அருகே  அண்மையில் இளைஞர்கள் மூவர் ஓடும் காரில் பட்டாசு வெடித்துச் சென்ற சம்பவம் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்துக் குறித்த இளைஞர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .