S.Renuka / 2025 ஜூலை 27 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவியானவள், தினமும் காலையில் தன் கணவர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல உணவைத் தயார் செய்வார். ஆனால், ஒரு மனைவி தன் கணவனுக்கு உணவு சமைத்து, அதற்காக அவரிடமிருந்து பணம் வாங்குவதைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு பெண் சமூக ஊடகங்களில் ஒரு விசித்திரமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் அந்தப் பெண், வேலைக்குச் செல்லும் தனது கணவருக்கு மதிய உணவு பேக் செய்ய தினமும் 10 டொலர்களை (3011.75 வசூலிப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் 'ரே', அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் மற்றும் டிக்டாக் க்ரியேட்டர் ஆவார். தனது கணவருக்கு உணவு பேக் செய்யும் வீடியோவை டிக்டோக்கில் பகிர்ந்து கொண்ட அவர், அதற்கு கட்டணம் வசூலிப்பதாகக் கூறினார். என் கணவருக்கு மதிய உணவு பேக் செய்வதற்காக, ஒரு நாளைக்கு தான் 10 டொலர்களை வசூலிப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், வேலைக்கு செல்லும் என் கணவருக்கு மதிய உணவு சமைக்க ஒரு நாளைக்கு 10 பவுண்டுகள் வசூலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
'மெக்டொனால்ட்ஸ்' அல்லது 'கிரெக்ஸ்' போன்ற கடைகளில் தினமும் இவ்வளவு பணத்தைச் செலவழிக்க முடிந்தால், வீட்டில் தனக்கு உணவு சமைக்க இவ்வளவு கடினமாக உழைக்கும் தனது மனைவிக்கு ஏன் அதே பணத்தைக் கொடுக்கக் கூடாது? "வெளியில் இருக்கும் ஒரு அந்நியருக்கு அவர் பணம் கொடுக்க முடிந்தால், எனக்கு ஏன் அதே அளவு பணம் கொடுக்கக் கூடாது?" என்றும் கூறியுள்ளார். இந்த வழியில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
25 Nov 2025