2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுநீர் சிகிச்சையால் குணமடைந்த பெண்

Mayu   / 2024 மார்ச் 03 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமது வாழ்க்கையின் அனைத்து அங்கத்திற்குமே சோஷியல் மீடியாவில் ஏராளமான ஆலோசனைகளும், ஹேக்குகளும் கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில ஆதாரப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் இருந்தாலும் பல நமக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக அமைகின்றது. எந்த ஆலோசனையை நம்ப வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலான காரியமாக இருக்கிறது.

சமீபத்தில் சுமா ஃபிரேல் என்ற ஒரு டிக் டாக் யூசர் உதவி உருவவியல் ஆலோசகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறுநீரை கண் மருந்தாக பயன்படுத்துவதற்கான ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.

தனது கண்களுக்கு சிறுநீரை பயன்படுத்தியதால் தனக்கு இருந்த கிட்ட பார்வை மற்றும் மங்கலான கண் பார்வை குணமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனது கண் பார்வை மேம்படும் வரை தினமும் சிறுநீர் துளிகளை தனது கண்களில் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் பிரபலமான இயற்கை மருத்துவரான ஜான் W ஆம்ஸ்ட்ராங் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபலப்படுத்திய “சிறுநீர் சிகிச்சை” என்ற மருத்துவ பயிற்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சிறுநீர் சிகிச்சை என்பது பல்வேறு விதமான மருத்துவ மற்றும் தோல் மசாஜ், ஈறு சிகிச்சை போன்றவற்றுக்க உதவுகிறது.

வழக்கமான மருந்துகளை காட்டிலும் கண்களுக்கு சிறுநீர் துளிகளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அவர் டிக் டாக்கில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.

அவர் இந்த வீடியோவில் தனது சொந்த அனுபவம் குறித்து விவரித்துள்ளார். அவருக்கு ஆஸ்ட்டிக்மாட்டிசம் மற்றும் மயோபியா இருந்ததாகவும், அதனால் வழக்கமான முறையில் அவரது கண்களில் சிறுநீரை பயன்படுத்தியதாகவும், அதன் பிறகு இவருக்கு இருந்த இந்த கண் பிரச்சனைகள் மாயமாக மறைந்து போனதாகவும் கூறியுள்ளார். வழக்கமாக இதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தீங்கு விளைவிக்கக்கூடிய கெமிக்கல் என்றும், சிறுநீர் இயற்கை சிகிச்சையாக அமைவதால் அதனை அவர் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச பலனுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலையிலும் கண்களில் சிறுநீர் துளிகளை பயன்படுத்த அவர் பரிந்துரை செய்கிறார்.

சிறுநீர் சிகிச்சை குறித்து பலர் ஆர்வம் காட்டி வந்தாலும், கண் பிரச்சனைகளுக்கு சிறுநீரின் நன்மை குறித்த எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும், ஆராய்ச்சியும் இதுவரை இல்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X