Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூலை 21 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுவாக மிகவும் கனமான எடையைத் தூக்குவது மற்றும் அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினமான செயல். சிலர் ஒரு நாளில் நூற்றுக்கணக்கான சிமென்ட் பைகளை தூக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் கனமான எடையை தூக்கி ஒரு இடத்திலிருந்து, இன்னோர் இடத்திற்கு மாற்ற தங்கள் கைகளை அல்லது தோள்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் யாராலும் செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய எடையை எளிதாக தூக்கி அனைவரையும் கவர்கிறார்கள். எனினும் ஒரு சிலர் செய்வதைப் பார்த்தால், வேறு யாராலும் முடியாது என்று தோன்றும்.
அந்தவகையில், 50 கிலோ சிமென்ட் மூட்டையை ஒருவர் தூக்கிச்சென்ற விதத்தை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு சிமென்ட் பையை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அதை தன் பற்களால் உறுதியாகப் பிடித்துக் கொண்டு எளிதாக வாயால் மேலே தூக்குகிறார்.
அதோடு நிற்காமல் திரும்பி, குடோனுக்கு வெளியே உள்ள இன்னொரு சாக்கு மூட்டையை முதுகில் சுமந்து கொள்கிறார். பின்னர் மெதுவாக, அவர் இரண்டு மூட்டைகளையும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து அவற்றை அங்கே இறக்கிவிடுகிறார்.
சாதாரணமாக இதை எடுத்துச் செல்வது கடினமாக இருக்கும் நிலையில், இவர் தன் வாயால் மூட்டையை தூக்கி செல்வதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
15 minute ago
15 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
18 minute ago