Editorial / 2024 ஜூலை 11 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீண்ட நேரமாக தொலைக்காட்சியை ( டிவி) பார்த்துக்கொண்டிருந்த தனது 3 வயது மகளுக்கு தந்தையொருவர் வினோதமான தண்டனை கொடுத்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் நடந்துள்ளது.
அந்த மகளின் கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தந்தை தண்டனை கொடுத்துள்ளார்.
இரவு உணவை தயாரித்ததன் பின்னர், தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு தந்தை அழைத்தார். மகள் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.
விரக்தியடைந்த தந்தை, அவர் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டார் இதனால் குறித்த சிறுமி அழத் தொடங்கினாள்.
இதைக்கண்ட ஜியாஜியாவின் தந்தை தன்னுடைய மகளின் கைகளில் ஒரு கிண்ணத்தை கொடுத்து, உன் கண்ணீரால் இந்த கிண்ணத்தை நிரப்பியவுடன் நீ டிவியை மீண்டும் பார்க்கலாம் என கூறியுள்ளார். தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க ஜியாஜியா முயற்சி செய்தார். 10 வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.
இந்த காணொளி ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியாவின் தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினர். எனினும், குழந்தை தண்டித்த இந்த சம்பவம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

36 minute ago
40 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
47 minute ago
56 minute ago