Mayu / 2024 ஜூலை 31 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் சில சிறப்புத் திறமைகள் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் இந்த சிறப்பான திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. மேலும் அவர்களின் இந்த தனித்துவமான திறமைக்காக, அவர்கள் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு நபரின் திறமை வெளி வந்துள்ளது. ஒரு நிமிடத்தில் 9 தக்காளியை வெட்டி உலக சாதனை படைத்துள்ளார். தக்காளி வெட்டுவது பொதுவான விஷயம் தானே. இதில் என்ன சாதனைஇருக்கிறது என்று கேட்டால், கண்ணை கட்டிக்கொண்டு தக்காளியை வெட்டியதே அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது.
நம்மில் பெரும்பாலோர் தக்காளியை சம துண்டுகளாக வெட்ட முடியாது, ஆனால் ‘சிக்ஸ் பேக் செஃப்’ என்று பிரபலமாக அறியப்படும் கனடிய சமையல்காரர் வாலஸ் வோங் என்பவர், கண்களை மூடிக்கொண்டு ஒன்பது தக்காளிகளை சம பாகங்களாக வெட்டியுள்ளார்.
இதன் மூலம் கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடத்தில் அதிக அளவிலான தக்காளிகளை வெட்டியதற்காக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் லண்டனில் உள்ள சமையல்காரர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரது இந்த சாதனை முயற்சி கின்னஸ் உலக சாதனையின் உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒரு நிமிடம் முடிவதற்குள், நான்கு தக்காளிகள் சீரற்ற முறையில் வெட்டப்பட்டதால், அதை நீக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். கின்னஸ் உலக சாதனை வழிகாட்டுதல்களின்படி, இந்த சாதனையை உருவாக்குவதற்கு, அனைத்து தக்காளிகளையும் சம அளவு எட்டு பகுதிகளாக வெட்ட வேண்டும் என்பதே ஆகும். இருப்பினும், நான்கு தக்காளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், வாலஸ் வோங் சாதனையைப் படைத்தார். அவரது சாதனை முயற்சியின் வீடியோ கின்னஸ் உலக சாதனை மூலம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago