2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

திருட வந்த வீட்டில் அயர்ந்து உறங்கிய திருடன்

Freelancer   / 2024 ஜூன் 04 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திருட வந்த வீட்டில் ஏசி இயந்திரத்தை ஓட விட்டு, குளுகுளு காற்றில் அயர்ந்து உறங்கிய திருடனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (2) அதிகாலை லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் பூட்டப்பட்டு இருந்த வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடு சுனில் பாண்டே என்ற மருத்துவருக்கு சொந்தமானது. அவர் வாராணசியில் பணியாற்றி வருகிறார். அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டின் ஓர் அறையில் ஏசி இருந்துள்ளது. அதை இயக்கிய அந்த திருடன், தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிட வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அது குறித்த தகவலை மருத்துவர் சுனில் வசம் தெரிவித்துள்ளனர். அவர் உள்ளூரில் இல்லாத காரணத்தால் தகவலை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்துள்ளனர். அப்போது அந்த திருடன் ஒரு கையில் கைபேசியை பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, திருடனை எழுப்பிவிட்டு அவனை கைது செய்தனர்.

இந்நிலையில், பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த செயல் நகைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X