Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 06 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன நடிகையான எஸ்தர் யுவைபப் போல் தனது தோற்றத்தை மாற்றவேண்டும் என்னும் ஆசையில் பெற்றோரின் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு தற்போது அதுவே பெரும் வினையாகிவிட்டது.
கிழக்கு சீனாவில், ஸேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த சூ சூனா (Zhou Chuna) என்னும் பெண், தனது 13 வயதில் இருந்தே 10 கண்ணிமை அறுவைசிகிச்சைகள், பல எலும்பு ஷேவிங் சிகிச்சைகள் என்பனவற்றை செய்துள்ளாராம். 100க்கும் மேற்பட்ட மருத்துவ நடைமுறைகளை தொடர்ந்து வந்துள்ளார்.
வலி மிகுந்த தொடர் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட அவருக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கையும் செய்துள்ளனர். ஆனாலும் அவர் அவற்றை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 18 வயதாகும் அந்தப்பெண், நடிகை எஸ்தர் யூ போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையில் பெற்றோரின் சம்மதத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.
இத்தனை சிகிச்சைகளால் அவருக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான மருத்துவச் செலவு மட்டும் ரூ.4.6 கோடி என்று தெரிகிறது. அப்பாவித்தனமாக தொடங்கிய சிறுமியின் செயல் தற்போது பெரும் பாதிப்புகளை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில வாரங்கள் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
9 minute ago
27 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
27 minute ago