2025 மே 02, வெள்ளிக்கிழமை

`மருமகளே` என அழைத்த ஆசிரியைக்கு இடமாற்றம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள பாடசாலையொன்றில் , ஆசிரியை ஒருவர் , தன்னிடம் கல்வி கற்கும் 12 ஆம் தர மாணவியை ‘மருமகளே‘  என நீண்ட காலமாக அழைத்து வந்துள்ளார்.

அத்துடன் அம்மாணவியின் புகைப்படத்தைத்  தருமாறும்,  தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி  வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ‘தன்னிடம் கற்கும் ஏனைய மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும், பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு திட்டுவதும், இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதும் என பல வழிகளில் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வியிடம்,  புகார்  அளித்துள்ளனர்.

இதனையடுத்து  குறித்த ஆசிரியை வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X