Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2017 மே 22 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தொன் நிறையுடைய கதவொன்று, 80 வயதுடைய வயோதிபப் பெண்ணின் தலையில் விழுந்ததால், அவர் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவமொன்று, ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயினில் உள்ள வெலினிகா கிறிஸ்தவ தேவலாயத்தில் வருடாந்த திருவிழா இடம்பெற்றுள்ளது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவலாயத்தில் திரண்டிருந்தனர்.
இதன்போது, தேவலாயத்தின் கதவானது திடிரென உடைந்து விழுந்தது. கதவு கீழே விழப்போவதை முன்கூட்டியே அவதானித்த பக்தர்கள் பலர் தலைதெறிக்க ஓடினர். எனினும் 80 வயது மூதாட்டி மட்டும் அவ்விடத்தில் மாட்டிக்கொண்டார். இவர் அவ்விடத்தை விட்டு நகர்வதற்கு முன்பே, 5 மீற்றர் உயரம் உடைய கதவு அவர் மீது விழுந்தது.
கதவு விழுந்ததில் மூதாட்டியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சனகூட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் ஆலயத்துக்குள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முற்பட்டதனாலேயே கதவு உடைந்தாக தீணையப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
52 minute ago
8 hours ago