2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரயில் நிலையத்தில் ஓடிய ஆபாச வீடியோ

Ilango Bharathy   / 2023 மார்ச் 21 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத்  திரையிலேயே  இவ்வாறு மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

 இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம்சுழித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது

இதனையடுத்து ரயில்வே பொலிஸார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர். அதே சமயம் சம்மந்தப்பட்ட விளம்பர நிறு வனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒப்பந்தமும் இரத்து செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X